JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, ஜனவரி 11, 2014

ஞானம் பிறக்கணும்.

A mature intellect is devoted, a mature heart is full of knowledge. Meditation matures your intellect as well as your heart. +Sri Sri Ravi Shankar 

இன்னிக்கு ஏகாதசி. 

தெரியும். 

அதுவும் வைகுண்ட ஏகாதசி.

அதுவும் தெரியும். ஏன் இது மாதிரி கேட்கறே ?

சிலருக்கு பலது புரியாது. பலருக்கு சிலது புரியாது. 

நான் அந்த சிலர் லே இருக்கேனா ? பலர் லே இருக்கேனா ?

அதுவே உங்களுக்கு புரியலே அப்படின்னா, 
சிலர் பலது புரிஞ்சாலும் புரியாது மாதிரி ஒரு போர்வையை போத்திண்டு இருக்காக.

ரொம்ப குளிர் இல்லையா ?

பகவத் கடாக்ஷம் எங்கேயாவது தன மேலே பட்டு, எங்கே நல்ல எண்ணங்கள் 
தோன்றி விடுமோ என்ற மாதிரியும் இருக்கும். 

எதுக்கு காலையிலே இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கே.?

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, இன்னிக்காவது அமைதியா இருங்கோ. 
அப்படின்னு சொல்றேன்.

நான் என்னிக்குமே அமைதி தானே. 

மனசை அமைதியா வச்சுண்டு, கோவிந்தா கோவிந்தா அப்படின்னு 
அந்த கோவிந்தனை நினைச்சுக்கோங்க.


கூடாரை வெல்லும் ஸ்ரீ கோவிந்தா.  



 கூடாரை வெல்லும் ஸ்ரீ .கோவிந்தா.

பெருமாள் கருட வாகனத்திலே வருகிறார். எல்லாரும் ஒரு நிமிஷமாவது பொறுமையாக இருந்து பார்க்க வேண்டுகிறேன்.





இன்று வைகுண்ட ஏகாதசி.

எல்லோரும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்று பெருமாளை சேவிக்க வேண்டுகிறேன்.


கவியரசர் கண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு அளித்த விளக்க உரை இதுவே.
சுப்பு தாத்தா பௌளி ராகத்தில் பாடிட முயற்சி செய்து இருக்கிறார். அது பிறகு வரும்,.


இன்றைக்கு நைவேத்யம் அக்கார வடிசல்.
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்  உபயம்.
கோவிந்தா கோவிந்தா அப்படின்னு  சொல்லிண்டு ஒரு வாய்
எல்லோரும்  சாப்பிட வேண்டும்.
பெருமாளை கண்கூட தரிசனம் செய்யணும்.

கோவிந்தனுக்கு அன்னியிலே லோகத்துலே பெரிசா அடையத் தக்கது எதுவும் இல்ல அப்படிங்கற ஞானம் பிறக்கணும்.

இன்னிக்கு மேடம் ஷைலஜா அவர்கள், துரை செல்வராஜ் அவர்கள் வலைக்கும் சென்று பெருமாள் தரிசனம் செய்யவும்.
akkaravadisil

சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா.




எனக்கு நித்யபடி இந்த அக்கார வடிசல் கிடைக்கணும்.

என்ன சொல்றீக ??

ஞானம் பிறக்கணும். அப்படின்னு சொன்னேன்.

கோவிந்தா கோவிந்தா.