JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 12, 2011

அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!




பாஞ்சாலி சபதத்தில் இருந்து ஒரு பாடல் எனது நண்பர் வலை பதிவு ஒன்றில் வெளியாகி உள்ளது. அதை நான் பாடி இருக்கிறேன். வெளியிட்டவர் திருமதி லலிதா மிட்டல் அவர்கள்.

பாரதியின் எழுத்து தான் என்னே !!



அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.

அது இங்கேயும் இருக்கிறது.

http://youtu.be/_UqVfy37094