JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஏப்ரல் 29, 2010

மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!

அப்பொழுது தான் வானலிலே இருந்து எடுத்த‌
      ஆவி பறக்கும்
      சூடான எட்டு  இட்டிலியும் இரண்டு உளுந்து வடையும்
      தெவிட்டாத‌
      தேங்காய் சட்டினியும் ,
      கொஞ்சமா உரைப்பு போட்ட கொத்துமல்லி சட்னியும்
      வேக வைக்காத வெங்காயத்தை நறுக்கி  பக்குவமாய்  பச்ச மிளகாய் கலந்து ஒரு சட்னி,
      இதமான இட்லி மிளகாய் பொடி, இதயம் நல்லெண்னை கலந்து,
      கதம்ப சாம்பாரும் கண்ணெதிரிலே வைத்து விட்டால்,
      ஆஹா...ஆஹா...ஆஹா...

      மனித்த பிறவி எடுத்ததே இதற்குத்தானே !!!
          
      பின்னே ஒரு  டிக்ரி காப்பி ( சக்கரை கொஞ்சமா போட்டாதான் டேஸ்ட் அபாரம் !!!)
                                    அம்சமாய் அரை கப் கண்டால்
                                    இதுவல்லவோ சொர்க்கம், என
                                    எகிறிக்குதித்திடுவேன்.

      சுப்பு தாத்தா சாப்பிட்ட இட்லி எங்கே கிடைக்கும் என்ற கேட்கிறீர்கள் ?
     இதோ.. 
தாத்தா அனுபவித்து சாப்பிட்ட இட்லி வடை சட்னி சாம்பார் காண இந்த பதிவின்
தலைப்பை கிளிக்குங்கள்.