JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, ஜனவரி 13, 2008

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் மார்கழி மாதம் கடைசி நாள் 14.1.2008 அன்று போகி பண்டிகை. நாம் கழிக்கவேண்டியது எல்லாம் கழித்து புதியன புகுவோம் என்பதை அறிவுறுத்தும் வகையில் கொண்டாடும் பண்டிகை. தை முதல் மாதம் முதல் தேதி 15.1. 2008 உலகத்தின் எல்லா வளமும் சூரியன் ஒளிதனைப் பொருத்தே அமைகிறது. கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகை இது. அடுத்த நாள். மாட்டுப் பொங்கல். உழவனுக்கு உறு துணையாய் நிற்கும் மாடுகளுக்கு மாலையிட்டு அவைகளை அவற்றின் இன்றியமையாமை தனை எடுத்துரைக்கும் நாள். காணும் பொங்கல். தமிழ் மக்கள் பொதுவான பல இடங்களுக்கும் சென்று கண்டு களிக்கும் திரு நாள். உலகத்தமிழரின் திரு நாளாம் பொங்கல் திரு நாள் அன்று எல்லோருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள் Please click here to find HOW TO COOK SAKKARAI PONGAL. Share Sweet Pongal with all Dear and Near Ones in your environment. Let us celebrate this Pongal day with all its festivities.